இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பிரச்சினை – தூதரக ரீதியாக பேச்சு வார்த்தை!
இந்தியா-சீனா இடையேயான எல்லைப் பிரச்சினை தொடர்பாக இரு நாடுகளும் ராணுவ மட்டுமின்றி தூதரக ரீதியாக பேச்சு வார்த்தைகளையும் தொடரும் என தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு லடாக்கின் எல்லைப் பகுதியில் இரு நாடுகளும் ராணுவப் படைகளை குவித்து இருப்பதால் அந்த பகுதிகளில் பதற்றம் நீடித்து வருகிறது.
இது தொடர்பாக இந்தியா மற்றும் சீனாவின் ராணுவ உயர் மட்ட அதிகாரிகள் இடையே கடந்த ஆறாம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் எல்லைப் பிரச்சனை அமைதியான முறையில் பேசி தீர்க்க இரு நாடுகளும் ஒப்புக் கொண்டதாக இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இரு தரப்பினரும் ஆலோசித்து முடிவு எடுத்த பிறகு அடுத்தகட்ட பேச்சுவார்த்தை தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.






