--- --:--:-- --

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரொனா பாதிப்பும், கொரொனா உயிரிழப்பும்!

APTOPIX Italy Virus Outbreak

A patient in a biocontainment unit is carried on a stretcher from an ambulance arrived at the Columbus Covid 2 Hospital in Rome, Tuesday, March 17, 2020. For most people, the new coronavirus causes only mild or moderate symptoms. For some it can cause more severe illness, especially in older adults and people with existing health problems. (AP Photo/Alessandra Tarantino)

நாடு முழுவதும் கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரண்டரை லட்சத்தை நெருங்கி வருகிறது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் ஐந்தாம் தேதி 30 என்கிற அளவில் இருந்த கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அசுர வேகத்தில் அதிகரித்து. மூன்று மாதங்களில் 2 லட்சத்து 46 ஆயிரத்து 628 என்ற அளவுக்கு வந்துள்ளது.

 

மாநில அரசுகள் அளித்த புள்ளிவிபரங்களின் அடிப்படையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று இரவு 10 மணியளவில் வெளியிட்ட அறிக்கையில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது. அதன்படி இந்தியா முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,929 அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 293 என்ற அளவில் உள்ளது.

 

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இன்னும் சில தினங்களில் ஒரு லட்சத்தை எட்டும் என அஞ்சப்படுகிறது. இந்திய அளவில் கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்து 975 ஆக உயர்ந்துள்ளது.

 

இன்னும் ஒரு சில நாட்களில் அந்த மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை எட்டும் என மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மகாராஷ்டிராவில் 3 ஆயிரத்து 7 பேர் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 91 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர்.

 

இதனால் மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆயிரத்து 60 ஆக அதிகரித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon