--- --:--:-- --

மதப்பிரச்சனையாக மாறியுள்ள யானை உயிரிழப்பு ! மனிதாபிமானம் எங்கே போகிறது?

2

கேரளாவில் கருவுற்றிருந்த யானை கொல்லப்பட்டது மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையிலான சிக்கலாக கருதப்படாமல் மத பிரச்சினையாக மாறியுள்ளது. உணவு தேடி ஊருக்குள் நுழைந்த யானை வெடி வைத்து கொல்லப்பட்ட சம்பவம் மனித சமூகத்தின் மனிதாபிமானத்தை கேள்வி குறியாக்கியுள்ளது. யானை ஏன் ஊருக்குள் நுழையும் சூழல் ஏற்பட்டது.

 

விலங்குகளை வெடிவைத்து விரட்ட வேண்டிய சூழல் விவசாயிகளுக்கு ஏன் ஏற்பட்டது என்று கேள்விகளே விவாதத்திற்குள்ளாகி இருக்க வேண்டும். ஆனால் இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் மலப்புரம் மாவட்டத்தில் யானை உயிரிழந்ததாக தவறான தகவல் பரவியதையடுத்து இஸ்லாமியர்களுக்கு எதிரான பிரச்சனையாக யானையின் உயிரிழப்பு சம்பவம் உருமாறியுள்ளது.

 

70.2 சதவீத முஸ்லிம்கள் 27.6 சதவீதம் இந்துக்கள் வாழும் மலப்புரம் மாவட்டம் வன்முறை மிகுந்த மாவட்டம், உள்ளிட்ட பல தவறான ட்வீட்டுகள் பகிரப்படுகின்றன. சில சாமானியர்கள் முதல் முக்கிய தலைவர்கள் வரை இந்த தவறான தகவல்களைப் பகிர்கிறார். உண்மையில் யானை உயிர் இழந்தது மலப்புரத்தில் அல்ல பாலக்காடு மாவட்டத்தில் தான்.

 

காயம்பட்ட யானையால் இரண்டு வாரங்களாக உணவோ நீரோ எடுத்துக் கொள்ள முடியாமல் பல இடங்களில் சுற்றி திரிந்துள்ளது. பாலக்காடு மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள கிராமத்தில் தான் வெடியால் காயம்பட்ட யானை ஒரு நாள் முழுக்க நீரில் நின்று உயிரிழந்ததாக கேரள வனத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

 

கோயில் பூசாரி கிராமத்து முஸ்லிம் தலைவர்களை நியமிப்பது, கோவில்களுக்கு தேவையான பூக்களை முஸ்லிம் விவசாயிகள் விளைவித்து வழங்குவது என சகோதரத்துவத்துடன் வாழும் நிலையே மலப்புறத்தில் நிலவுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கிறார்கள். சுதந்திரம் பெற்ற பின்னர் இதுவரை ஒரு கலவரம் கூட அம்மாவட்டத்தில் நிகழ்ந்ததில்லை என ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

 

ஒரு காட்டு யானையின் வாய்க்குள் வெடியை மனிதர்களால் நேரடியாக வழங்க இயலாது என தெளிவுபடுத்தியுள்ளன.ர் இங்கு கேள்விக்குள்ளாக்க வேண்டியது மனிதாபிமானத்திற்கு எதிராக மாறி இருக்கும் ஒட்டுமொத்த மனித சமூகத்தையும் தான்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon