தந்தையின் பயிற்சியால் 2 வயதில் நீச்சலடிக்கும் குழந்தை!
வேலூருக்கு அருகே இரண்டு வயதில் நீச்சலடிக்கும் குழந்தை காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. வேலூரை அடுத்த மெல்மருவதுர் கிராமத்தை சேர்ந்த அங்கமுத்து தனலட்சுமி தம்பதிக்கு இரண்டு பெண், ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்களின் குழந்தையான இரண்டு வயது யாழினி யாருடைய உதவியும் இல்லாமல் நீச்சல் அடிக்கிறார்.
ஒன்றரை வயதிலேயே நீச்சல் அடிக்க கற்று கொள்ள ஆரம்பித்த யாழினி 6 மாத பயிற்சியில் நன்றாக நீச்சல் அடிப்பதாக பெருமிதத்துடன் கூறும் அங்கமுத்து மகனையும் இரண்டு வயதில் நீச்சல் அடிக்கும் மகனையும், மகளையும் வருங்காலத்தில் நீச்சல் வீரர்கள் ஆக்க வேண்டும் என்று நம்பிக்கையோடு இருக்கிறார்.






