--- --:--:-- --

தமிழகத்திலும் ஆட்டோ, டாக்சி ஓட்டுநர்களுக்கு ரூ.10,000 வழங்க வேண்டும்!

10

ஆட்டோ, கால்டாக்சி ஓட்டுநர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பொது முடக்கத்தால் ஆட்டோ, கால் டாக்சி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருவதாகவும் வாகன ஓட்டுநர் உரிமம் காப்பீடு மற்றும் தரச் சான்றிதழ் ஆகியவற்றை புதுப்பிக்க பத்தாயிரம் ரூபாய் வரை செலவு செய்வதாகவும் ஆட்டோ டாக்சி உரிமையாளர்கள் வேதனை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

 

ஆந்திராவில் வாகன மித்ரா திட்டத்தின் மூலம் ஆட்டோ, கால்டாக்சி ஓட்டுநர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் வழங்குவதை சுட்டிக்காட்டியுள்ள விஜயகாந்த் தமிழகத்திலும் அது போன்ற ஒரு திட்டத்தைக் கொண்டு வந்து ஆட்டோ, டாக்சி உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் நிவாரண உதவியாக வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon