இரண்டாவது மனைவியின் குழந்தையை கடித்து துன்புறுத்திய நபர்!
தேனி மாவட்டம் கம்பம் அருகே இரண்டாவது மனைவியின் மூன்றரை வயது பெண் குழந்தையை அடித்து துன்புறுத்திய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். தாத்தப்பன் குளத்தில் மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்த சிங்கராஜாவுக்கு கணவரை பிரிந்து குழந்தையுடன் வாழும் பரகத் நிஷாவுடன் தொடர்பு ஏற்பட்டது.
இருவரும் திருமணம் செய்துகொண்ட நிலையில் குடும்ப சண்டையால் பரக்கத் நிஷாவை அடித்து துன்புறுத்திய சிங்கராஜா அவரது 3 வயது மகளை அடித்து சித்திரவதை செய்துள்ளார். அவர்களை மீட்டு அக்கம்பக்கத்தினர் தேனி அரசு மருத்துவமனை அழைத்து சென்றனர்.
அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் சிங்க ராஜாவைப் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.






