--- --:--:-- --

சென்னையில் மைதானத்திற்காக நடந்த கொலை!

13

சென்னையில் விளையாட்டு மைதானத்தை யார் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது என்று முதலில் 23 வயது இளைஞர் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வில்லிவாக்கம் பஜனை கோவில் தெருவை சேர்ந்த ஷாஜகான் என்பவர் அம்பத்தூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார்.

 

காலையில் பாடி இரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான காலி மைதானம் ஒன்றில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த ஷாஜகானை அதே பகுதியை சேர்ந்த கும்பல் பயங்கர ஆயுதங்களால் தாக்கி விட்டு தப்பியது. தாக்குதலுக்கு உள்ளான ஷாஜகான் சம்பவ இடத்திலேயே பலியாகி விட சடலத்தை கைப்பற்றி வில்லிவாக்கம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

 

கொலை நடந்த மைதானம் தான் இந்த கொலைக்கான காரணம் என்கிறார்கள் காவல்துறையினர். மெட்ராஸ் திரைப்படத்தில் சுவருக்காக நடக்கும் கொலை போல மைதானத்தை யார் பிடிப்பது யாருடைய கட்டுப்பாட்டில் வைப்பது என்ற முதலில் வந்து முடிந்து இருப்பதாக கூறுகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon