--- --:--:-- --

ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்த டிரம்ப்!

2

அமெரிக்காவில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஜி-7 நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அந்நாட்டு அதிபர் டிரம்ப் பிரதமர் மோடிக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் மோடியும், அதிபர் டிரம்ப்பும் தொலைபேசியில் பேசிய விவரங்களை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

 

ஜி7 நாடுகள் குழுவில் இந்தியா உள்ளிட்ட மேலும் சில நாடுகளை சேர்க்க விரும்புவதாக பிரதமர் மோடியிடம் டிரம்ப் தெரிவித்ததாக அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. ட்ரம்பின் இந்த திட்டம் தொலைநோக்கு பார்வை கொண்டது என்றும் கொரோனா சூழலுக்கு பிந்தைய உலகம் நிலவரத்தை கருத்தைக் கொண்டது என்றும் பிரதமர் மோடி பாராட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அமெரிக்காவில் நடந்து வரும் வன்முறைகள் குறித்து டிரம்ப்பிடம் மோடி கவலை தெரிவித்ததாகவும், கொரொனா சூழல் குறித்து இருவரும் பேசியதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

 

இதுதவிர சீனாவுடனான எல்லை பிரச்சனை உலக சுகாதார நிறுவனத்தில் தேவைப்படும் மாற்றங்கள் குறித்தும் பேச்சுகள் நடைபெற்றதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த உரையாடல் குறித்து பிரதமர் மோடியும் தன் டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon