புல்வாமாவில் 3 பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சண்டையில் சுட்டுக் கொலை!
ஜம்மு காஷ்மீரில் புல்வாமாவில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். புல்வாமாவில் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு படையினர் அந்த பகுதியை சுற்றிவளைத்தனர்.
இதனையடுத்து அங்கு உள்ள வீடுகளில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்திய போது அவர்களுக்குள் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை மூண்டது. இதில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அவர்கள் இருந்த இடத்தில் இருந்து ஏராளமான ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன. மூன்றுபேரும் ஜெய் சி முகமது பயங்கரவாதிகள் என கூறப்படுகிறது. துப்பாக்கி சண்டை குறித்து வதந்திகள் பரவுவதை தடுக்கும் வகையில் அந்த வகையில் செல்போனில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டது.






