கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு மத்திய அரசு 7,500 ரூபாயும், மாநில அரசு 5,000 ரூபாயும் வழங்க கோரி தீர்மானம்!
கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் 12,500 ரூபாய் வழங்க வேண்டும் என திமுக சார்பில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் தோழமைக் கட்சிகளின் கூட்டம் காணொளி மூலம் நடைபெற்றது.
அதில் காங்கிரஸ், மதிமுக, இடதுசாரிகள்,விசிக, ஐ, ஜெ. கே உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. கூட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மத்திய அரசு 7 ஆயிரத்து 500 ரூபாயும், மாநில அரசு ஐந்தாயிரம் ரூபாயும் உடனடியாக வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்புகளுக்கு மீட்டர் பொருத்தும் சட்ட திருத்திற்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் மருத்துவ முதுநிலைப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளதை திரும்ப பெறாவிட்டால் நாடு முழுவதும் ஒத்த கருத்துள்ள அனைத்து கட்சிகளையும் சேர்த்து போராட்டம் அறிவிக்கப்படும் என்றும் திமுக மற்றும் தோழமை கட்சிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.






