--- --:--:-- --

விவசாயிகளின் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் செயலில் மத்திய, மாநில ஈடுபடக்கூடாது!

2

விவசாயத்திற்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் நடவடிக்கையில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஈடுபடக்கூடாது என மத்திய மாநில அரசுகளை இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாரிவேந்தர் வலியுறுத்தியுள்ளார்.கடந்த 30 ஆண்டுகளாக பெற்றுவரும் இலவச மின்சார திட்டத்திற்கு ஆபத்து வந்துவிடுமோ என தமிழக விவசாயிகள் அச்சத்தின் பிடியில் இருப்பதாக பாரிவேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

 

பயன்படுத்தப்படும் மின்சார அளவை கணக்கிடவே மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது என்று தமிழக மின்துறை அமைச்சரின் விளக்கத்தை விவசாயிகள் ஏற்பதாக இல்லை என கூறியுள்ள அவர் மின் பயன்பாட்டினை கணக்கு இருப்பதாக கூறி பிற்காலத்தில் மின் அளவீட்டின்படி கட்டண முறை கொண்டு வரப்படலாம் என விவசாயிகள் நினைப்பதாக கூறியுள்ளார்.

 

கட்டணத்தை மாநில அரசுகள் வங்கிகள் மூலமாக மின் வாரியத்திற்கு செலுத்தி விடும் என்று அறிவிக்கக் கூடும் என்றும் இது ஒரு கட்டத்தில் இலவச மின்சாரத்தை ரத்து செய்வதற்கு வசதிகளை ஏற்படுத்தும் நடவடிக்கையாக அமைந்துவிடும் என்றும் பாரிவேந்தர் குறிப்பிட்டுள்ளார். பெட்ரோலிய மண்டலம், இடு பொருட்கள் விலை உயர்வு , இயற்கை சீற்றங்களால் இழப்பு போன்றவை ஆட்கள் பற்றாக்குறை ஆகிய சுமைகளுக்கு இடையே மின்சார மட்டுமே இலவசமாக கிடைக்கிறது என்ற ஒரு ஆறுதலில் விவசாயிகள் இருப்பதாகவும் அதற்கும் ஆபத்து ஏற்படுகின்ற வகையில் சமீபத்திய நடவடிக்கை எடுப்பதாகவும் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.

 

எனவே நேரடியாகவோ, மறைமுகமாகவோ இலவச மின்சாரம் திட்டத்திற்கு ஆபத்து நேராத வண்ணம் தெளிவான அறிவிப்பை வெளியிடவேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon