தமிழகத்தில் ஜூன் 1 முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்!
ஜூன் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று நான்கு சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி கோவை – மயிலாடுதுறை, மதுரை – விழுப்புரம், திருச்சி – நாகர்கோவில், கோவை – காட்பாடி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழித்தடங்களில் சிறப்பு ரயில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இன்டர்சிட்டி சூப்பர் பாஸ்ட் ரயில்கள் அனைத்து நாட்களிலும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரொனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படாது.






