--- --:--:-- --

சின்னத்திரை படப்பிடிப்பு நடத்த 60 பேருக்கு அனுமதி!

2

சின்னத்திரை படப்பிடிப்பில் 60 பேர்வரை பங்கேற்கலாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய அறிவிப்பை வெளியிட்டார். சின்னத்திரை படப்பிடிப்பை தொடங்க கடந்த 21ஆம் தேதி தமிழக அரசு அனுமதி கொடுத்தது. ஆனால் நடிகர், நடிகைகள் உட்பட 20 பேர் மட்டுமே படப்பிடிப்பு தளத்தில் பங்கேற்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.

 

தொழில்நுட்ப கலைஞர்கள் உட்பட 20 பணியாளர்களை மட்டுமே வைத்து படப்பிடிப்பை நடத்த இயலாது என்று அதிக பணியாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியவை அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

 

இந்நிலையில் நடிகர் நடிகையர் உட்பட அதிகபட்சமாக 60 பணியாளர்களை கொண்டு சின்னத்திரை படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதி வழங்கியுள்ளார். சென்னையில் படப்பிடிப்பு நடத்த மாநகராட்சி ஆணையரிடமும், பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்த ஆட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon