--- --:--:-- --

குழந்தை 1.35 லட்சத்துக்கு விற்கப்பட்ட வழக்கில் தந்தையும் உடந்தையாக இருந்தது அம்பலம்!

4

நாகை மாவட்டம் நாகூரில் 3 வயது பெண் குழந்தையை ஒரு லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்றதாக தந்தை உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

நாகூரை சேர்ந்த அசரப் அலி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகாரில் தனது 3 வயது பெண் குழந்தை மும்தாஜ் பேகத்தை அசன் முகமது என்பவர் மதரஸாவில் சேர்த்து விடுவதாகக் கூறி அழைத்து சென்று கோவில்பட்டியை சேர்ந்த தம்பதிக்கு விற்றுவிட்டதாக தெரிவித்திருந்தார்.

 

இதையடுத்து கோவில்பட்டியிலிருந்து குழந்தை மீட்கப்பட்டு தூத்துக்குடி குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் அசன் முகமதுவிடம் விசாரணை மேற்கொண்டபோது அசரப் அலியின் ஒப்புதலுடன் குழந்தை விற்க்கப்பட்டதாகவும் கடந்த ஆண்டு அவர் தனது மற்றொரு குழந்தையை விற்றதாகவும் கூறி அதற்கான ஆவணங்களை எழுதிக் கொடுத்தார்.

 

இதை எடுத்து அலி அசரப் முகமது ஆகியோரை கைது செய்த போலீசார் குழந்தையை வாங்கிய ரஜபூநிஷா உள்ளிட்ட இருவரை தேடி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon