--- --:--:-- --

உதகையில் வந்த புதிய ரக வெட்டுக்கிளி..வட மாநிலத்தை அச்சுறுத்தவா என விவசாயிகள் அச்சம்!

2

உதகை அடுத்துள்ள காந்தல் பகுதிகளில் புதிய ரக வெட்டிகிளி வந்ததால் விவசாயிகளும், வியாபாரிகளும் அச்சம் தெரிவிக்கின்றனர். காந்தல் பகுதியில் வியாபாரிகள் வழக்கம்போல் கடைகளை அடைத்து செல்லும்போது கடை வாசலில் புதிய ரக வெட்டிக்கிளி தென்பட்டுள்ளது .

 

இதுவரை கண்டிராத வெட்டிகிளி எனக் கருதப்பட்டு உடனடியாக அதனை ஒரு சிறிய பாட்டிலில் அடைத்து மாவட்ட ஆட்சியருக்கு நேரடியாகத் தொடர்புகொண்டு வடமாநிலங்களை அச்சுறுத்திவரும் வெட்டுக்கிளியா என சந்தேகத்தின் அடிப்படையில் புகார் கொடுக்கப்பட்டது.

 

இந்த நிலையில் தமிழக – கேரள எல்லையில் உள்ள புதிய ரக வெட்டிகிளி களால் பயிர்களுக்கு எவ்வித சேதமும் ஏற்படாது என தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது. ஆலர்சஸ் மில்லேரியல் எனும் தாவர பெயர் கொண்ட புள்ளி வெட்டுக்கிளிகளே புல் பள்ளி பகுதியில் காணப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

 

இவை வட மாநிலங்களில் பயிர் சேதம் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் வெட்டுக்கிளிகள் அல்ல என்றும் கூடலூர் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon