--- --:--:-- --

கோவில்பட்டி அருகே இரட்டை கொலையில் தொடர்புடைய நபர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது !

3.1

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பசுவந்தனை, தெற்கு பொம்மையாபுரம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி யின் மகன் மகாராஜன். இருவரும் கடந்த 18ந்தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். மது போதையில் ஏற்பட்ட தகராறு காரணமாக நடைபெற்ற இந்த கொலை வழக்கு தொடர்பாக அந்த கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன், அவரது தந்தை காளிப்பாண்டி இருவரையும் பசுவந்தனை போலீசார் கைது செய்து பேராவூரணி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இந்தக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாலமுருகனை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட எஸ்பி அருண் பாலகோபாலன், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கு பரிந்துரை செய்தார். அதனடிப்படையில் பாலமுருகனை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

 

இதனைத் தொடர்ந்து பேராவூரணி சிறையில் இருக்கும் பாலமுருகன் குண்டர் தடுப்பு காவலுக்கு மாற்றப்பட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon