--- --:--:-- --

தனது தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வந்த சிறுமி மாஞ்சா நூல் அறுத்து காயம்!

8

சென்னை மாதவரத்தில் தடையை மீறி மாஞ்சா நூல் பயன்படுத்தி பட்டம் பறக்க விட்டு நபரை போலீசார் கைது செய்தனர். நேற்று முன்தினம் வியாசர்பாடியை சேர்ந்த பாஷா என்பவர் மனைவி குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தபோது குழந்தையின் கழுத்தில் மாஞ்சா நூல் அறுத்து காயம் ஏற்பட்டது.

 

இதுகுறித்து எம்கேபி நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து மாஞ்சா நூல் பயன்படுத்தி பட்டம் பறக்கவிடுபவர்களை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் எம்கேபி நகர் மாஞ்சா நூலில் பட்டம் பறக்க விட்டிருந்த தினேஷ் குமார் என்பவரை போலீசார் கையும் களவுமாக சுற்றிவளைத்தனர்.

 

மேலும் அமேசான் ஆன்லைன் வர்த்தக தளம் மூலம் வாங்கியதாக தினேஷ்குமார் கூறியதால் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon