இலங்கை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் மறைவுக்கு இரங்கல்!

இலங்கை அமைச்சராக பதவி வகித்து வந்த ஆறுமுகம் தொண்டமான் காலமானார். அவருக்கு வயது 55 . இலங்கை பெருந்தோட்ட துறை அமைச்சராக பதவி வகித்து வந்த இவர் அங்கு தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக செயல்பட்டு வந்தார். நேற்று இரவு வீட்டில் தவறி விழுந்த நிலையில் உடனடியாக மீட்கப்பட்டு கொழும்பிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

 

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதும் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் உயிரிழந்தார். இதையடுத்து அவரது மறைவிற்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தற்போதைய அரசின் முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சராக ஆறுமுகம் தொண்டமான் செயல்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply