--- --:--:-- --

கொரோனா ஊழலை திசை திருப்பவே ஆர் எஸ் பாரதியின் கைது நடவடிக்கை..!

8.1

திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதியை கைது செய்யும் நோக்கிலேயே வழக்கை குற்றப் பிரிவுக்கு மாற்றி இருக்கிறார்கள் என்று திமுக வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். கொரொனா கால ஊழலையும் நிர்வாக தோல்வியையும் திசைதிருப்ப விரோத எண்ணத்துடன் ஆர் எஸ் பாரதி கைது செய்யப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .

 

மூன்று மாதங்களுக்கு முன்பு கொடுக்கப்பட்ட ஒரு புகாரை அதிகாலையில் தூசு தட்டி எடுத்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் ஆர் எஸ் பாரதி கைது செய்யப்பட்டதற்கு திமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

அன்பகத்தில் பேசியது தொடர்பாக ஆர் எஸ் பாரதி விளக்கமளித்து வருத்தமும் தெரிவித்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய ஸ்டாலின் புகார் தொடர்பான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய கோரிய வழக்குகள் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில் அதனை மதிக்காமல் ஆர் எஸ் பாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

கொரொனா கால ஊழல் மற்றும் நிர்வாக தோல்வியை திசை திருப்ப விரோத எண்ணத்துடன் ஆர் எஸ் பாரதி அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த ஸ்டாலின், பட்டியல் இன பழங்குடி இன மக்களின் உரிமைகளுக்காகவும், சமூக நீதிக்காகவும் காலம் காலமாகப் பாடுபட்டு வரும் திமுகவின் பணிகளுக்கு யாரும் களங்கம் கற்பிக்க முடியாது எனக் கூறியுள்ளார்.

 

மேலும் தகவல் தொழில்நுட்ப பிரிவில் இருப்பவர்கள் உள்ளிட்ட திமுகவினர் மீது பொய்வழக்குகள் போடுவதை திமுக கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்றும் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon