திருப்பூர் மாவட்டத்தில் குவியல் குவியலாக போதை சாக்லேட்கள்!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே குவியல் குவியலாக போதை சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. சின்னக்கரை என்ற பகுதியில் உள்ள கடை ஒன்றில் போதை சாக்லேட்டுகள் மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்கப்படுவதாக காவலர்களுக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனை அடுத்து நிகழ்விடத்திற்கு வந்த மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ஜெயலலிதா தலைமையிலான அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது கடையில் 50 கிலோ அளவிலான போதை சாக்லேட்டுகள் மற்றும் போதைப் பொருட்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
அவற்றை உடனடியாக பறிமுதல் செய்த அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர்.






