--- --:--:-- --

எதிர்க் கட்சித் தலைவர்கள் காணொளி மூலம் ஆலோசனை! மு.க ஸ்டாலின் பங்கேற்பு!

2

கொரொனா கால பாதிப்புகள் குறித்து காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் எதிர்க் கட்சித் தலைவர்கள் காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார்.

 

புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்புவது, பொது முடக்கத்தால் வேலை இழந்தோருக்கு நிவாரணம் வழங்குவது உள்ளிட்ட அம்சங்களை மத்திய அரசிடம் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.

 

இதுகுறித்து கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி காணொளி மூலம் ஆலோசனை நடத்தினார்.

 

குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் டி ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சீதாராம் ஹெச்சூரி, சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சார்பில் சரத்பவார், மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் தேவே கவுடா ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றனர்.

 

தமிழக கட்சிகளின் காங்கிரஸுடன் கூட்டணியில் உள்ள திமுக தலைவர் மு க ஸ்டாலின் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் என 18 கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon