காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மீது வழக்கு..! காரணம் PM CARES நிதி குறித்த ட்வீட்..!
PM CARES நிதி குறித்து காங்கிரஸ் கட்சி உடைய அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கில் பதிவிடப்பட்ட கருத்துகளுக்காக சோனியா காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பது தொடர்பாகவும் அவர்களுக்கான ரயில் கட்டணம் தொடர்பாகவும், பாஜக, காங்கிரஸ் இடையே வார்த்தை போர் நடந்தது. இந்த நிலையில் கடந்த 11ஆம் தேதி காங்கிரசின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் PM CARES தொடர்பாக கருத்து பதிவிடப்பட்டது.
புலம்பெயர் தொழிலாளர்களை மீட்பதற்கும், வெளிநாட்டில் சிக்கியுள்ளவர்களை மீட்பதற்கும், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கு PM CARES நிதியை பயன்படுத்த வில்லை என்றால் வேறு எதற்கு பயன்படுத்த போகிறீர்கள் என அதில் கேள்வி எழுப்பப்பட்டது.
PM CARES நிதி தொடர்பாக மேலும் சில கருத்துக்களும் பதிவிடப்பட்டது. இது தொடர்பாக வழக்கறிஞர் பிரவீன் குமார் என்பவர் கர்நாடக மாநிலம் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தந்தார் . அதன் பேரில் இரண்டு பிரிவுகளின் கீழ் சோனியா காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.






