பலத்த காற்றால் செல்போன் டவர் வீட்டின் மேல் சரிந்து விழுந்தது!
சேலத்தில் இரவு வீசிய பலத்த காற்றால் வீடு ஒன்றின் மொட்டை மாடியில் அமைக்கப்பட்ட இருந்த செல்போன் டவர் எதிர் வீட்டின் மீது சரிந்து விழுந்தது. சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சங்ககிரி, காடையாம்பட்டி, வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இரவு பலத்த காற்றும் அதனைத் தொடர்ந்து மழையும் பெய்தது.
இதில் தென் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மொட்டை மாடியில் அமைக்கப்பட்டிருந்த செல்போன் டவர் ஒன்று சரிந்துஎதிர் வீட்டு மாடியில் விழுந்தது. அங்கு ஆட்கள் எவரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை.






