அம்மா உணவகத்தில் உணவை ருசி பார்த்த அமைச்சர் !!!
கோவை அரசு மருத்துவமனைக்கு ” kals group of company ” சார்பில் வென்டிலேட்டர் ரூ.9.85 லட்சம் மதிப்பீட்டில் வழங்கப்பட்டது.இதனை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி,எம்.எல்.ஏ – க்கள் வி.சி.ஆறுக்குட்டி, ஓ.கே.சின்னராஜ், அரசு மருத்துவமனை முதல்வர் காளிதாஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர்,அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் நுழைந்த உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திடீரென ஆய்வு மேற்கொண்டார்.அங்கு உணவருந்தி கொண்டிருந்தவர்களிடம் உணவின் தரம் குறித்து விசாரணை மேற்கொண்டார்.அவர்களிடம் ஊரடங்கு முடியும் வரை தொடர்ந்து அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

பின்னர்,அங்கு பணியில் இருந்த அம்மா உணவக ஊழியர்களிடம் பொருட்கள் பற்றாக்குறை உள்ளதா ? எனவும் கேட்டறிந்தார்.பின்னர்,அம்மா உணவகத்தில் மக்களுக்காக சமைக்கப்பட்ட உணவை ருசித்து சாப்பிட்டார்.அவருடன் மாவட்ட ஆட்சியர் ராசாமணி,எம்.எல்.ஏ – க்கள் வி.சி.ஆறுக்குட்டி,ஓ.கே.சின்னராஜ் உள்ளிட்டோரும் உணவருந்தினர்.






