விமான ஆராய்ச்சிக்கு உதவும் தேன் சிட்டு!

உலகிலேயே மிகச் சிறந்த வளர்ப்பு பறவை என்ற பெயரையும், விமானங்கள் நீண்ட தூரம் பறப்பதற்கு ஏற்ற இறக்கை அமைப்பை கொண்டுள்ளதாகவும் அமேசான் காடுகளில் காணப்படும் தேன்சிட்டுகள் அறியப்படுகின்றன.

 

இது குறித்து லண்டனில் உள்ள பிரிஸ்டல் மற்றும் இம்பீரியல் கல்லூரியில் நடந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தேன் சிட்டு பறக்கும் விதம் குறித்து ஆராயப்பட்டது. அப்போது குறைந்த நீளம் கொண்ட இறக்கை மூலம் நீண்ட தூரம் பறக்கும் திறனை அமேசானிய தேன்சிட்டுகள் கொண்டிருப்பது தெரியவந்தது.

 

இதற்கு முன்னதாக ஸ்விஃப்ட் ஆர்டிக் கொக்குகள் மற்றும் இதுபோன்ற இறக்கைகளைக் கொண்டு இருந்தன. தற்போது விமானங்களின் இறக்கைகளை தேன் சிட்டுகளின் இறக்கையின் வடிவம் போல மாற்றும் முறை குறித்து ஆராயப்பட்டதாக ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply