” ஜிவ்வென்று ” உயர்ந்து வரும் கறிக்கோழி இறைச்சி விலை.அசைவப்பிரியர்கள் அதிர்ச்சி !!!
நாடு முழுவதும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் பல்வேறு வகையான தொழில்கள் முடங்கியுள்ளன. இந்த நிலையில் 3 ஆம் கட்ட ஊரடங்கு நீட்டிப்பின் போது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.அதில் இறைச்சி கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டன.
கடந்த சில வாரங்களாக கறிக்கோழி இறைச்சியின் விலை உயிருடன் ரூ.140 வரையும் , தோலுடன் ரூ.180 முதல் ரூ.200 வரையும் , உறித்தது ரூ.210 முதல் ரூ.230 வரையும் விற்பனையானது.இந்த நிலையில் தற்போது கறிக்கோழி இறைச்சி உயிருடன் ரூ.180 , தோலுடன் ரூ.240 ,உறித்தது ரூ.270 வரை விற்பனையாகி வருகிறது.அதாவது கடந்த வாரம் விற்பனையானதை விட ரூ.40 உயர்த்தி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
” ஜிவ்வென்று ” உயர்ந்து வரும் கறிக்கோழி இறைச்சியின் விலையால் அசைவப்பிரியர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.






