கிருமி நாசினி தெளிப்பதால் கொரோனா கிருமி அழியாது-WHO உலக சுகாதார அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், தெருக்கள் அல்லது சந்தைகளில் கிருமிநாசினி தெளிப்பதன் மூலம் கொரோனா உள்ளிட்ட பிற நோய்க்கிருமிகளை அழிப்பது நிரூபிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளது.
மேலும் மனிதர்கள் மீதும் கிருமி நாசினியை தெளிப்பது எங்கும் பரிந்துரைக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ள உலக சுகாதார அமைப்பு, இது உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் தீங்கு விளைவிக்கும் எனத் தெரிவித்துள்ளது.இதனால் மனிதர்களுக்கு கண் மற்றும் தோல் எரிச்சல், மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் இரைப்பை குடல் விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் :
மழைநீரில் விழுந்த செல்போன்.. உருண்ட இளைஞர்..!
ஆன்லைனில் துன்புறுத்துவதும் ராகிங் தான்: பல்கலைக்கழக மானிய குழு
கண்டெய்னர் லாரி, ஈச்சர் வேன் நேருக்கு நேர் மோதல்: 2 பேர் மரணம்
விடுதியில் உணவு சாப்பிட்ட 15 மாணவர்களுக்கு வாந்தி..!
மாணவிகளின் ஆடைகளை கழற்றிவிட்டு சோதனை..!
ராஜஸ்தானில் விமான விபத்து.. 2 விமானிகள் உயிரிழப்பு..!