ஒரு பணியாளருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டதற்காக தொழிற்சாலை மூடப்படாது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. தொழில் துறையினருடன் நடத்தப்பட்ட ஆலோசனையின் போது பணியாளர்கள் யாருக்காவது ஒருவருக்கு கொரொனா ஏற்பட்டால் அதற்கு தொழிற்சாலையை மூட வேண்டி இருக்குமோ என அச்சம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டது.
அப்போது தொழிற்சாலைகளுக்கான வழிகாட்டும் நெறிமுறைகள் பற்றிய தலைமை செயலகம் குறிப்பிட்டது. அதன்படி ஆலை நிர்வாகங்கள் மாற்று ஏற்பாடுகளை வைத்திருக்க வேண்டும் பணியாளர்களை குழுக்களாகவும் மண்டலங்களாகவும் பிரித்து தனி மனித இடைவெளியுடன் ஈடுபடுத்த வேண்டும்.
ஒரு பணியாளருக்கு கொரொனா தொற்று ஏற்படும் பட்சத்தில் உற்பத்தி தடைபடக் கூடாது பாதிக்கப்பட்ட நபர்கள் பணியாற்றும் பிரிவில் உள்ளவர்கள் தனிமைப் படுத்தப் பட்டால் போதும்.தொழிற்சாலைகள் மூடப்படும் என்ற அச்சம் தேவையில்லை என தலைமை செயலாளர் சண்முகம் விளக்கமளித்தார்.