--- --:--:-- --

மனைவிக்கு பிறந்த டிவின்ஸ் ! டி.என்.ஏ சோதனையில் தந்தைக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!

10

தனது மனைவிக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒன்று தன்னுடைய குழந்தை இல்லை என்று டிஎன்ஏ சோதனையில் தெரிய வந்ததால் தந்தை அதிர்ச்சியடைந்துள்ளார். சீனாவில் புதிதாக பிறந்த குழந்தைகளின் பிறப்பு பதிவு செய்வதற்காக டிஎன்ஏ சோதனைக்கு உட்படுத்தப்படுவது வழக்கம்.

 

அந்த வகையில் புதிதாக பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்தபோது அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் மருத்துவர்கள் மற்றும் மற்றவர்களைவிட குழந்தையின் தந்தைக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது.

 

ஏனெனில் பிறந்த குழந்தைகளில் ஒன்று அவருடையது அல்ல என்றும் இரட்டை குழந்தைகளில் ஒன்று அவருடையது அல்ல என்றும், இரட்டை குழந்தைகளில் ஒன்றின் டிஎன்ஏ மாறுபட்டுள்ளதால் அது வேறு தந்தைக்கு பிறந்த தெரிவிக்கப்படுகிறது .

 

வெவ்வேறு தந்தையுடன் பிறந்த இரட்டைக் குழந்தைகள் மிகவும் அரிதான நிகழ்வு என்றும் இதேபோன்று சம்பவம் ஒரு கோடியில் ஒன்றுதான் நடக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon