ஒரு பக்கம் மது ஆலைகளை இறுக கட்டிப்பிடித்து கொண்டு, மறுபக்கம் மதுக்கடை திறப்பிற்கு எதிராக போராட்டம் – ஸ்டாலினை வெச்சி செஞ்ச ” விகடன் ” !!!
கொரோனா வைரசின் தாக்கம் நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் 4 வது முறையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. 3 வது முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.அதில் போதிய சமுக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளுடன் இந்தியா முழுவதும் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.தமிழகத்திலும் சில கட்டுப்பாடுகளுடன் சென்னையை தவிர்த்து மாநிலம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.
இந்த நிலையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட மே 7 ஆம் தேதியன்று திமுக தலைவர் ஸ்டாலின்,தனது மனைவி மற்றும் மகனுடன் கருப்புச்சட்டை அணிந்து கடை திறப்பிற்கு எதிராக போராட்டம் நடத்தினார்.
அதனையடுத்து திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் சார்பில் அன்றே தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடை திறப்பிற்கு எதிராக போராட்டங்கள் நடத்தின.இதனிடையே உயர் நீதிமன்ற உத்தரவை மீறி சமூக விலகலை முறையாக கடைபிடிக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் தொடுத்த வழக்கில் டாஸ்மாக் கடைகளை மூட நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனையடுத்து தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்கு விசாரணையும் நடைபெற்று வருகிறது.டாஸ்மாக் கடைகளை திறக்க திமுக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

டாஸ்மாக் கடைகளுக்கு சப்ளை செய்யப்படும் ” சரக்குகளில் ” பெரும்பாலானவை டி.ஆர்.பாலு,கனிமொழி, ஜெகத்ரட்சகன் உள்ளிட்ட பல திமுக – வை சேர்ந்த வி.ஐ.பி களால் நடத்தப்பட்டு வரும் மது ஆலைகளில் இருந்தே வழங்கப்பட்டு வருகிறது.சப்ளையினை நிறுத்தினாலே டாஸ்மாக் கடைகள் செயல்பட முடியாது.மது ஆலைகளை நடத்திக்கொண்டே மதுக்கடை திறப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ஸ்டாலினுக்கு எதிராக கடும் விமர்சனங்களும் முன் வைக்கப்படுகின்றன.
மேலும்,திமுக வி.ஐ.பி கள் நடத்தும் மது ஆலைகளை மூட உத்தரவிடாமல் டாஸ்மாக்கை மூடச்சொல்வது எவ்விதத்தில் நியாயம் என மக்களும் குறிப்பாக பெண்களும் கேள்வியெழுப்பி வருகின்றனர்.இந்த நிலையில் பிரபல தமிழ் வார இதழான விகடன் தற்போது வெளியிட்டு கார்டூன் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கார்டூனில் திமுக தலைவர் ஸ்டாலின் மது ஆலைகளை இறுக கட்டிப்பிடித்துக்கொண்டு,ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் எதற்கு ? என போராட்டத்தில் ஈடுபட்டு வருவது போன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த கார்டூன் மது ஆலைகளையும் விட்டுக்கொடுக்காமல்,போராட்டத்திலும் ஈடுபட்டு வரும் திமுக தலைவர் ஸ்டாலின் ” இரட்டை வேஷம் ” போடுவதை உணர்த்துவதாக அமைந்துள்ளது.திமுக தலைவர் ஸ்டாலினை வெச்சு செஞ்ச பிரபல தமிழ் வார இதழான ” விகடன் ” வெளியிட்டுள்ள இந்த கார்டூன் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






