தமிழகத்தில் கொரொனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது!
இன்று மட்டும் தமிழகத்தில் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 385 ஆக உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 309 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 20 பேருக்கும், திருநெல்வேலி மாவட்டத்தில் 22 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 21 பேருக்கும் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டங்களில் தலா 11 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரை, தேனி மாவட்டத்தில் ஆறு பேருக்கும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இருவருக்கும், புதுக்கோட்டையில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

விருதுநகர், தென்காசி, பெரம்பலூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் தலா இருவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் 4 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது திருவண்ணாமலை மாவட்டத்தில் நான்கு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எனவே தமிழகத்தில் இன்று மட்டும் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 385 ஆக உள்ளது. எனவே இதுவரை தமிழகத்தில் வரலாற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை 108 ஆக அதிகரித்துள்ளது.






