டாஸ்மாக் கடைகளில் வாரத்தின் ஏழு நாட்களும் ஏழு கலரில் டோக்கன் வழங்க முடிவு!
தமிழகத்தின் டாஸ்மாக் கடைகளில் மதுபானம் வாங்க வாரத்தின் ஏழு நாளும் ஏழு கலரில் டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை வரை ஒவ்வொரு நாளும் சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் உள்ளிட்ட ஏழு கலரில் டோக்கன் வழங்கப்படும்.
டோக்கனில் குறிப்பிடப்படும் நேரத்தில் மட்டுமே மதுபானம் வழங்கப்படும். டாஸ்மாக் கடைகளில் கூட்டம் கூடாதவண்ணம், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் நோக்கிலும் டாஸ்மாக் இந்த ஏற்பாட்டினைச் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.






