ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு திரும்பும் பொருட்டு புலம்பெயர் தொழிலாளி ஒருவர் கர்ப்பமாக உள்ள தனது மனைவி மற்றும் குழந்தையை சிறிய வண்டியில் அமர வைத்து 700 கிலோமீட்டர் அழைத்துச் சென்ற நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில் பணிபுரிந்து வந்த ராமு ஊரடங்கு காரணமாக மத்திய பிரதேசத்தின் பாலக்காடு மாவட்டத்திலுள்ள சொந்த ஊருக்கு குடும்பத்துடன் நடந்தே செல்ல பயணப்பட்டார்.
ஆனால் கர்ப்பமாக உள்ள மனைவி மற்றும் குழந்தைகள் நீண்ட தூரம் நடக்க முடியாததால் வழியில் கிடைத்த பொருட்களை வைத்து தற்காலிக தள்ளு வண்டியைத் தயாரித்து அவர்களை அதில் அமர வைத்து மத்திய பிரதேசத்திற்கு சென்றடைந்தனர். அங்கு அவர்களை மீட்ட போலீசார் உணவு கொடுத்து வாகனம் மூலம் சொந்த ஊர் அனுப்பினர்.
மேலும் செய்திகள் :
சபாநாயகர் என் வாயை திறக்க விடுவதே இல்லை : ராகுல்
வரதட்சணை கேட்டு கர்ப்பிணி கொலை.. கோர்ட் அதிரடி தீர்ப்பு..!
இந்தியா- சீனா இடையே 5 ஆண்டுகள் தடை நீக்கம்?
டெல்லி சென்ற இபிஎஸ்..!
புதுச்சேரி, காரைக்காலில் நீட் தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்..!
புதுச்சேரியில் கல்லூரி மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் இலவச பஸ் பாஸ்..!