--- --:--:-- --

5 பேரின் உயிரை காப்பாற்றிய நாய்க்கு உருவச்சிலை திறப்பு!

14

சீனாவில் 12 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த பூகம்பத்தில் 15 பேரின் உயிரை காப்பாற்றிய மோப்ப நாயின் சிலை திறந்து வைக்கப்பட்டது. வெஞ்சுவான் பகுதியில் கடந்த 2008 ஆம் ஆண்டு பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. அப்போது ஏராளமானோர் மண்ணுக்குள் புதைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

 

அப்போது செங்கு என்று பெயரிடப்பட்ட மூன்று வயது உடைய நாய் ஒன்று தனது அபார மோப்ப சக்தியின் மூலம் 15 பேரின் உயிரை காப்பாற்றியது. இதனையடுத்து செங்கு சீனாவின் ஹீரோவாக கொண்டாடப்பட்டது இந்த நிலையில் செங்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி தனது 13வது வயதில் உயிரிழந்தது.

 

இந்த நிலையில் செங்குவின் செயலை போற்றும் வகையில் அதன் உருவம் பொறித்த சிலை திறந்து வைக்கப்பட்டது. அப்போது அதன் பயிற்சியாளர் கண்களில் கண்ணீர் மல்க செங்குவின் சிலையை தழுவிய காட்சி பார்ப்பவர்களின் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon