கொரொனா பாதிப்பில் 12ஆவது இடத்திற்கு சென்ற இந்தியா!
உலகளவில் கொரொனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் கனடாவை முந்தி இந்தியா 12வது இடத்திற்கு வந்துள்ளது. உலகில் கொரொனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி ஆகியவை முதல் 3 இடங்களை வகிக்கின்றன.
அமெரிக்காவின் அண்டை நாடான கனடா 12-ம் இடத்தில் இருந்தது. அந்த நாட்டில் பாதிப்பு எண்ணிக்கை 69,156 ஆக இருந்தது. இந்நிலையில் கனடாவை விட குறைவான எண்ணிக்கையே கொண்டிருந்த இந்தியா அந்த எண்ணிக்கையை நேற்று தாண்டியது.
அதாவது இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை நேற்று 70 ஆயிரத்தை கடந்து. இதனால் கனடாவை முந்தி 12 ஆவது இடத்திற்கு இந்தியா சென்றது. பதினோராவது இடத்தில் இந்தியாவின் அண்டை நாடான சீனா உள்ளது. அந்நாட்டில் 84 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உறுதியாகியுள்ளது 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.






