தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

வெப்பச்சலனம் காரணமாக 16 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வறட்சியை நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என்று வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

தஞ்சாவூர் ,திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக் கும், கன்னியாகுமரி, நாகப்பட்டினம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

திருச்சி, கரூர், சேலம், தர்மபுரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் 106 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Leave a Reply