சிவகங்கை அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஜெயகாந்தன் முன்னிலையில் செவிலியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்து கொண்டனர்.சிவகங்கை அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சை பெற்றுவந்தவர்களில் இன்று ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் குணமடைந்தனர். அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் பொன்னாடை கொடுத்து வீட்டிற்கு வழியனுப்பி வைத்தார்.
கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேர், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 22 பேர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் ஏற்கனவே சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 12 பேர், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 பேர் குணமடைந்தனர். இந்நிலையில் இன்று ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் குணமடைந்தனர்.
அவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் பொன்னாடை கொடுத்து வீட்டிற்கு வழியனுப்பி வைத்தார்.தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 11 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர்ந்து பிளாரன்ஸ் நைட்டிங்கேல் 200-வது பிறந்தநாளையொட்டி உலக செவிலியர் தினம் நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் முன்னிலையில் செவிலியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்து கொண்டனர்.மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல், மருத்துவமனை நிலைய கண்காணிப்பாளர் மீனாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.