--- --:--:-- --

போதையில் தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்த மகன்!

10

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மது போதையில் தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்தவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உசிலம்பட்டியை சேர்ந்த வேலுச்சாமி, செல்வி தம்பதியினரின் மகனான மாயக்கண்ணன் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு ஆடு மேய்த்து வந்துள்ளான்.

 

இவன் போதைக்கு அடிமையானவன் என கூறப்படுகிறது. நடைபாதையில் வீட்டிற்கு வந்த தாயுடன் தகராறில் ஈடுபட்ட மாயக்கண்ணன் அரிவாளால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளான். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon