மருத்துவப் பணியாளர்கள் 40,000 பேருக்கு கிரீன் கார்டு!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


அமெரிக்காவில் வெளிநாட்டு மருத்துவ பணியாளர்கள் 40,000 பேருக்கு கிரீன் கார்டு விசா வழங்குவதற்கான சட்ட மசோதாவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்மொழிந்து உள்ளனர். அமெரிக்காவில் கொரொனா வைரசால் 13 லட்சத்து 47 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இவர்களில் 80 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவ பணியாளர்கள் அதிகம் தேவைப்படுவதால் வெளிநாடுகளை சேர்ந்த மருத்துவர்கள் 15 ஆயிரம் பேருக்கும், செவிலியர்கள் 25 ஆயிரம் பேருக்கும் கிரீன் கார்டு விசா வழங்க வகை செய்யும் சட்ட மசோதாவை நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள் கொண்டு வந்தனர்.

 

முந்தைய ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட பயன்படுத்தப்படாத விசாக்களை திரும்ப ஒதுக்குவதன் மூலம் கொரொனா அச்சுறுத்தலை சமாளிக்க தேவையான மருத்துவ பணியாளர்களை பெற முடியும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த மசோதா சட்டமாக்கப்பட்டால் எச்1பி ஜெ2 விசாக்களில் அமெரிக்காவில் பணியாற்றி வரும் இந்திய மருத்துவர்களும், செவிலியர்களும் கிரீன் கார்டு விசா பெற முடியும்.


Leave a Reply