தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


தமிழகத்தில் வெப்பச் சலனத்தால் அடுத்த 48 மணி நேரத்தில் பல மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

கோவை, நீலகிரி, ராமநாதபுரம், விருதுநகர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

 

குமரிக்கடல், லட்சத்தீவு ,மாலத்தீவு ஒட்டியுள்ள பகுதிகளில் சூறை காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிக அளவாக கன்னியாகுமரி மாவட்டம் ஆகிய நாடுகளில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

 

குழித்துறை, சிவலோகம் ஆகிய இடங்களில் 8 சென்டி மீட்டரும், கொட்டாரத்தில் ஏழு செண்டி மீட்டரும், கன்னியாகுமரியில் ஆறு சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.


Leave a Reply