சண்டையை வேடிக்கை பார்க்க வந்த புது மாப்பிளைக்கு கத்தி குத்து!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே குடிபோதையில் இரு பிரிவினர் இடையே நடைபெற்ற தகராறில் ஒன்றும் அறியாத புது மாப்பிள்ளை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டிருக்கிறார். பொட்டிபுரம் கிராமத்தை சேர்ந்த 5 க்கும் மேற்பட்டோர் குடி போதையுடன் இருசக்கர வாகனத்தில் செட்டியபட்டி கிராமத்திற்கு சென்று இருக்கின்றனர்.

 

அவர்கள் அங்கிருந்த மக்களிடம் தகராறில் ஈடுபட்ட நிலையில் சத்தம் கேட்டு அந்த பகுதி பொறியாளரான விஷ்ணுப்பிரியன் என்பவர் வீட்டை விட்டு வெளியே வந்திருக்கிறார்.

 

அவரை போதை கும்பல் கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த நிலையில் கும்பலில் ஒருவனை வளைத்து பிடித்த மக்கள் இருசக்கர வாகனங்களையும் அடித்து நொறுக்கிய மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Leave a Reply