குடித்ததைக் கண்டித்த மனைவிக்கு அரிவாள் வெட்டு!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மது அருந்தியதை கண்டித்த மனைவியை அரிவாளால் வெட்டிய கணவன் கைது செய்யப்பட்டான். சேந்தமரம் மாடன் கோவில் தெருவை சேர்ந்தவர் என்று அந்த நபர் ஊரடங்கு காரணமாக கடந்த 40 நாட்களாக குடிக்காமல் இருந்துள்ளான்.

காலை குளித்துவிட்டு முதல் முழு போதையில் வந்தவரை இத்தனை நாள் குடிக்காமல் நன்றாக இருந்தீர்களே இன்றைக்கு ஏன் குடித்தீர்கள் என மனைவி மல்லிகா கேட்கவே வீட்டில் இருந்த அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். மனைவியை வெட்டிய உணர்வு கூட இல்லாமல் அரிவாளுடன் வீதியில் சுற்றி திரிந்த வரை போலீசார் கைது செய்தனர்.


Leave a Reply