தமிழகத்தில் கொரொனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,535 அதிகரித்துள்ளது!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


தமிழகத்தில் இன்று மட்டும் கொரொனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 526 ஆக உள்ளது. இன்று சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 279 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் 67 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

செங்கல்பட்டு மாவட்டத்தில் 40 பேருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தின் 31 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 26 பேருக்கும்,திருவண்ணாமலை மாவட்டத்தில் 15 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 17 பேருக்கும், அரியலூர் மாவட்டத்தில் 16 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 8 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கூடலூர் மாவட்டத்தில் 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மற்றும் தேனி மாவட்டத்தில் தலா இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, நாமக்கல், நீலகிரி, தஞ்சாவூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் இன்று மட்டும் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 526 ஆக உள்ளது, எனவே ஒட்டு மொத்தமாக தமிழகத்தில் கொரொனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,535 அதிகரித்துள்ளது.


Leave a Reply