25 கோடி ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட முந்தைய கடல் உயிரினத்தின் படிமம்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


சீனாவில் 25 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கடல்வாழ் உயிரினத்தில் புதை படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தினர். அப்போது கார்டோ ரிக்கஸ் குடும்பத்தை சேர்ந்த கடல் உயிரினத்தின் புதைபடிமம் கண்டுபிடிக்கப்பட்டது. தட்டையான நீண்ட வாலுடன் முதுகில் துடுப்புடன் காணப்படும் இந்த வகை உயிரினம் நீளமான வாயும் அதில் ஏராளமான கோரைப் பற்களையும் கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது.

 

சுமார் 25 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்ததாகக் கருதப்படும் இந்த உயிரினம் அதிகபட்சம் 30 அடி நீளம் வரை வளர்ந்து இருக்கலாம் என நம்பப்படுகிறது.இந்த நிலையில்தான் கார்டோ ரிக்கஸ் குடும்பத்தின் ஒன்றரை அடி நீளமுள்ள மீன் போன்ற உயிரினத்தின் கற்படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply