வீரமரணமடைந்த சிஆர்பிஎஃப் வீரரின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதி

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஜம்மு காஷ்மீரில் வீர மரணம் அடைந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் மேலூரை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் மத்திய ரிசர்வ் படையில் பணியாற்றி வந்தார்.

 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அவர் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் வீரமரணம் அடைந்தார். இதற்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு இருக்கும் முதல்வர் சந்திரசேகரின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ராணுவ வீரரின் குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க உத்தரவிட்டு இருப்பதாகவும் தனது அறிக்கையில் முதல்வர் கூறியுள்ளார்.


Leave a Reply