தமிழகத்தில் கொரொனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 4,058 ஆக அதிகரிப்பு!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


ஒட்டுமொத்த தமிழகத்திலேயே இன்று கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 508 ஆக உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 279 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து செங்கல்பட்டு மாவட்டத்தில் 38 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.

 

கூடலூர் மாவட்டத்தில் 68 பேருக்கு இன்று கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தமாக 229 பேருக்கு தோற்று உறுதியாகியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் 91 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மேலும் ஏழு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

கள்ளக்குறிச்சியில் இன்று மட்டும் 38 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தம் 53 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்கனவே 41 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம், மதுரை, பெரம்பலூர், சேலம், தென்காசி,திருநெல்வேலி, திருச்சி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு இன்று மட்டும் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரண்டு நபர்களுக்கும் ,நாமக்கல் மாவட்டத்தில் 15 பேருக்கும், நீலகிரியில் நான்கு பேருக்கும், தேனி மாவட்டத்தில் 5 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 18 பேருக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் 25 பேருக்கும், விருதுநகர் மாவட்டத்தில் ஒருவருக்கும் கொரொனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இதன்மூலம் தமிழகத்தில் இன்று மொத்தமாக கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 508 அதிகரித்துள்ளது.

 

ஒட்டுமொத்த தமிழகத்தில் இதுவரை கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 4,058 ஆக எகிறியுள்ளது


Leave a Reply