தடையை மீறி கடைகளைத் திறந்த கோயம்பேடு வியாபாரிகள்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


சென்னை கோயம்பேடு சந்தையில் தடையை மீறி நூற்றுக்கும் அதிகமான கடைகளில் வியாபாரிகள் திறந்து இருந்தனர். வியாபாரிகள், தொழிலாளர்கள் அப்பகுதி மக்கள் என நூற்றுக்கும் அதிகமானோருக்கு கொரொனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.

 

இதனை தொடர்ந்து கோயம்பேடு சந்தை தற்காலிகமாக மூடப் படுவதாகவும், அங்கு வியாபாரம் செய்ய தடை விதித்து மாநகராட்சி அறிவித்தது. சென்னையை அடுத்த திருமழிசையில் வியாபாரம் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

 

ஆனால் இதனை ஏற்க மறுத்த நூற்றுக்கும் அதிகமான மொத்த வியாபாரிகள் கோயம்பேடு சந்தையில் கடைகளை திறந்து வைத்து இருந்தனர். முன்னதாக கோயம்பேடு சந்தைக்கு 50க்கும் மேற்பட்ட லாரிகள் காய்கறிகளை ஏற்றி வந்து இருந்தன. பல்வேறு பகுதிகளில் இருந்து மிகக் குறைந்த எண்ணிக்கையில் வியாபாரிகள் அங்கு காய்கறி வாங்க வந்திருந்தனர்.


Leave a Reply