திரைத்துறையினருக்கும் தளர்வுகள் வழங்க வேண்டும்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


தொழில் துறையினருக்கு நிபந்தனைகளுடன் தளர்வு வழங்கியது போல திரைத்துறையினருக்கும் தளர்வு வழங்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அந்த சம்மேளனத்தின் தலைவர் ஆர் கே செல்வமணி முதல்வர் பழனிசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

 

அதில் தமிழ் திரைப்படத் துறையினரின் அனைத்து வேலைகளையும் நிறுத்தி 50 நாட்களாகியுள்ளதால் தொழிலாளர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 17 தொழில் துறையினருக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி இருப்பது போல் திரைப்படத் துறைக்கும் தொலைக்காட்சிகளுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

குறைந்தபட்சம் திரைப்படங்களுக்கு படப்பிடிப்பு அல்லாத பணிகளான ரிக்கார்டிங், டப்பிங் போன்ற போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளுக்கும், தொலைக்காட்சி படப்பிடிப்பிற்கும் அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

இதன் மூலம் 40 முதல் 50 சதவீத தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும் என்றும் தனிமனித இடைவெளியுடன் தொழிலாளர்களை பணி புரிய வைக்க முடியும் எனவும் திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.


Leave a Reply