சீனாவில் மணமக்கள் இருவருடன் மட்டும் நடைபெற்ற திருமணம்!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


கொரொனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தின் எதிரொலியாக சீனாவில் உறவினர்கள், நண்பர்கள் என யாருமின்றி நடைபெற்ற திருமணத்தை ஆன்லைன் மூலம் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஜெஜியாங்க் மாகாணத்தை சேர்ந்த மாஞ்சியருண் மற்றும் ஜாங்கிடோங்க் அக்டோபர் மாதம் பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு இருந்தனர்.

 

இந்த நிலையில் கொரொனா அச்சுறுத்தல் காரணமாக தங்கள் முடிவை கைவிட்ட மணமக்கள் எளிமையாக பாரம்பரிய முறைப்படி பங்கேற்று திருமணம் செய்துகொண்டனர். மணமக்கள் இருவர் மட்டுமே பங்கேற்ற இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற வீடியோ எர்கெங்க் பகிர்வு வலைதளம் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.


Leave a Reply