பல பெண்களை மோசடி வலையில் சிக்கவைத்த காசி!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : கோப்புபடம்


பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்ததாக கைதான நாகர்கோவிலை சேர்ந்த காசியை காவலில் எடுத்து விசாரிக்க மகளிர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சென்னை பெண் மருத்துவர் உள்ளிட்ட பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்த வழக்கில் நாகர்கோவிலை சேர்ந்த காசி என்ற இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

முகநூல் மூலம் வலைவீசி பெண்களை நம்ப வைத்து இந்த மோசடிகளை காசி அரங்கேற்றி வருகிறார். இவர் மீது நாகர்கோவில் வடசேரி காவல் நிலையத்தில் கந்து வட்டி தொடர்பான வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

காசியை காவலில் எடுத்து விசாரிக்க நாகர்கோவில் மகளிர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் அனுமதி கோரியிருந்தனர். இதனையடுத்து காசியை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க மகளிர் நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.


Leave a Reply